தமிழ்

Va Va Va Kanna Va Song Lyrics | #Rajinikanth, #Amala | #Velaikaran #1987 | #TamilRomanticSongsLyric


வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே
ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே
ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ
நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது

வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
எனக்கொரு சிறுகதை நீ
இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ
தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ…ஆ…
தொடத் தொட தொடர்கதை நீ…ஆ…
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா


#வா #வ #Va #Vavava #Rajnikanth #amala #TamilMannan #Thalaivar #ThalaivarRajini #Thalaivaa #TamilSongLyrics #TamilSongLyrics #TamilKing #Rajini #RajiniMovieLyrics #RajiniMovieSongLyrics #ThalaivarSongLyrics #SongLyrics #EvergreenRomanticSongLyrics #RevergreenSongLyrics #RomantictamilFilmSongLyrics #1987TamilSongLyrics #1987TamilMovieSongLyrics
Comment :
Related Items

தமிழ்

வள்ளி வள்ளி என வந்தால் | Valli Valli Ena Vanthan Song Lyrics | #Ilaiyaraaja, #S.Janaki | #IlayarajaMelody வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான் சொல்
Like Reply Share

தமிழ்

Va Va Va Kanna Va Song Lyrics | #Rajinikanth, #Amala | #Velaikaran #1987 | #TamilRomanticSongsLyric வா வா வா கண்ணா வா வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
Like Reply Share

MalayalamLyrics

110 Saranams | Saranam Vili | Ayyappan | Sabarimala | #Devotional Add Each Words With - Saranam Ayyappa 1. Swamiye 2. Harihara Suthane 3. Kannimoola Ganapathy Bhagavaane 4. Malikappurathama
Like Reply Share

தமிழ்

Va Va Vanji Song Lyrics | வா வா வஞ்சி இள மானே | Ilamane Song | Guru Sishyan | #Ilaiyaraja #Prabhu | #Seetha Singers - #SPBalasubramaniam, #KSChithra Music - #Ilaiyaraaja வா வா வஞ்சி இளமானே
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2018™