தமிழ்

Usilampatti Penkutti | #Gentleman | A.R.Rahman | Shahul Hameed, #Swarnalatha | #Tamil-Lyricsபடம் : ஜென்டில்மேன்
Year : 1993
இசை : #ரஹ்மான்
பாடியவர்கள் : சாகுல் ஹமீது, #ஸ்வர்ணலதா
வரிகள் : #வைரமுத்து


உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேண்டி
உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
குதி போட்டு வந்தேண்டி

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே

வெடலப்பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு
இடுப்பு சேல இடைவெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆசபட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அது தான் பெண்ணின் குணம்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே#உசிலம்பட்டி-பெண்குட்டி #உசிலம்பட்டி #உTamil-Old-Songs-Lyric #Tamil-Movie-Songs-Lyrics #Tamil-Movies-Song-Lyric #Tamil-Cinema-Songs-Lyric

Comment :
Related Items

தமிழ்

Jaan Ho Jarur Aiha Lyrics - Pawan Singh | #Bhojpuri-Lyrics Album : Jaan Ho Jarur Aiha Singer : Pawan Singh Lyricist : Arun Bihari Music : Ashish Verma Mix & Master : Ashish Verma Arrange
Like Reply Share

MalayalamLyrics

Vathikkalu Vellaripravu (വാതിക്കലു വെള്ളരി പ്രാവ്) | #2020-Malayalam-Lyrics Movie : Sufiyum Sujathayum Song : Vathikkalu Vellaripravu Cast : #Jayasurya, Aditi.Rao.Hydari Lyrics : #BK.Harinara
Like Reply Share

தமிழ்

Usilampatti Penkutti | #Gentleman |# A.R.Rahman | Shahul Hameed, #Swarnalatha | #Tamil-Lyrics படம் : ஜென்டில்மேன் Year : 1993 இசை : #ரஹ்மான் பாடியவர்கள் : சாகுல் ஹமீது, #ஸ்வர்ணலதா வரிகள்
Like Reply Share

தமிழ்

Ennavale Adi Ennavale | Kaadhalan | #Movies-Lyrics Movie : #Kaadhalan Year : #1994 Cast : #Prabhudeva, #Nagma பாடகா் : #பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : #எ.ஆா்.ரஹ்மான் பெண் : ம்ம்ம் ம
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2020™