தமிழ்

Tamil Songs Lyric | இளங்காத்து வீசுதே | Elangaathu Veesudhey | Ilaiyaraja Songs Lyric


இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

பின்னி பின்னி சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒன்னுக்கொண்ணு தான் இணைஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்கு தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

மனசுல என்ன ஆகாயம்
தினம் தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா?
அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம் தோறும்
மலர் தொடுக்க நாறை எடுத்து
யார் தொடுத்த மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
மலை நதி போல…….

கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
#இளங்காத்து-வீசுதே #இளங்காத்து #இ #Suriya.Sivakumar, #Vikram, #Elangaathu-Veesudhey #Tamil-Songs-Lyric #Tamil-Movies-Songs-Lyric


இளங்காத்து வீசுதே Video Song
https://youtu.be/xobWk2KzdJComment :
Related Items

தமிழ்

Mannennum Maaya Thee Song Lyrics | Bhoomika Tamil Movie Songs Lyrics | Andrea Jeremiah Movie : Mannennum Maaya Thee Movie : #Bhoomika Casts : Aishwarya Rajesh Singer : Andrea Jermiah Lyricst
Like Reply Share

MalayalamLyrics

Open Your Wings (Chirakukal Mulakkuvan) Lyrics | Rohit Gopalakrishnan feat. MC Mushti, Jazadin & Kalai Mk Album : Chirakukal Mulakkuvan Singers - Sneha Sujith Shenoi, Harini Ravi Language : #
Like Reply Share

தமிழ்

ஹே கொட்டா Lyrics - Nattamai Movie Songs Lyrics | #1994-Tamil-Songs-Lyrics Movie : #Nattamai Music : #Sirpy Lyric : #Vairamuthu Singers : S. Janaki, #Mano Year : #1994 ஹே கொட்டா பாக்கும
Like Reply Share

Valimai-Tamil-Movie

Naanga Vera Maari Lyrics | Valimai Movie Songs Lyrics | Ajith Kumar | Thala | Tamil Lyrics Movie : Valimai Song : Naanga Vera Casts : Ajith Kumar, Janhvi Kapoor, Huma Qureshi, Karthikeya G Lyr
2 Likes Reply Share
Hash Tags
¤ Privacy Contact US
© FunRocks.iN 2021™