Pookum Malarai Song Lyrics | Udhaya | A R Rahman | Hariharan | Tamil Song Lyrics | #பூக்கும்
பூக்கும் மலர்கள் கைகள் குலுக்கி தென்றல் சொல்லும் காலை வணக்கம்! ஓஹோ.. அலாரச் சேவல் அதிகாலை மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள் அன்னை வயல்கள் பிள்ளை மனங்கள் உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள் (பூக்கும்..)
சின்னச் சிரிப்புப் போதுமே செல்ல நண்பனே கோடி செல்வம் எதற்கு? நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே உறவு போதும் எனக்கு (சின்ன..)
பச்சைத் தாளில் வெள்ளை எழுத்து கள்ளிச் செடியில் காதல் கவிதை கிச்சுக் கிச்சு யார் மூட்டிவிட்டது வெடித்துச் சிரிக்கும் பருத்திச் செடிகள் ஓஹோ பட்டுப் பூக்கும் புல் வெளிகள் இவை அல்லவா சுக வரங்கள்? (சின்ன..)
பின்னல் செடி விழுந்து ஊஞ்சல் ஆடக் கொடுக்கும் ஆலமரம் கூட தோழி எனக்கு (பின்னல்..) சேறு படிந்த வேட்டி மெல்லிய செருப்பு மாலைச் சந்தை கூச்சல் இசை எனக்கு கைகளை நீட்டி நிலவைத் தொடும் யோகம் வேண்டும் எனக்கு யோகம் வேணும் எனக்கு யோகம் வேண்டும் எனக்கு (சின்ன..)
உதயா (2004) படத்திலிருந்து A.R.ரகுமான் இசையில் ஹரிஹரன் மற்றும் குழுவினர் பாடிய பாடல். வரிகள்: பழனி பாரதி