தமிழ்

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி (Anjali Anjali Pushpanjali) Song Lyrics - Duet | #A.R.Rahman


Movie : #Duet
Song : Anjali Anjali Pushpanjali
Casts : #Prabhu, Ramesh Aravind
Music : #A.R.Rahman
Lyricst : #Vairamuthu
Singers : #S.P.Balasubramaniam, #K.S.Chithra
Year : #1994அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொண்ணே உன் பெயருக்கு பொண்ணாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி.....
(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி

திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி.......
(பூவே உன்)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது

இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி...

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனஞ்சலி
கண்ணே உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
(அஞ்சலி )

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே

நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி...
(பூவே உன்)#Anjali-Anjali-Pushpanjali #Duet #Popular-Songs-Lyrics-Tamil #Trending-Songs-Lyrics-Tamil

Comment :
Related Items

தமிழ்

Retha Kottaikulle (இரத்த கோட்டைக்குள்ளே) | #Tamil-Christian-Lyrics இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என் மேலே நெருங
Like Reply Share

தமிழ்

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி (Anjali Anjali Pushpanjali) Song Lyrics - Duet | #A.R.Rahman Movie : #Duet Song : Anjali Anjali Pushpanjali Casts : #Prabhu, Ramesh Aravind Music : #A.R.Rahman Lyric
Like Reply Share

தமிழ்

Thanni Karuthirichi Song Lyrics | #Tamil-Lyrics Movie Name : Ilamai Oonjal Aadukirathu Cast : #Rajinikanth, #Kamal.Hassan, #Jaya.Chithra, #Sripriya பாடகர் : #மலேசியா.வாசுதேவன் இசையமைப்பாளர் :
Like Reply Share

தமிழ்

Un koodavae porakkanum Lyrics | #Siva.Karhikeyan | Namma Veettu Pillai Singer : Sid Sriram Music by : #D.Imman Lyricst :#GKB Movie : Namma Veettu Pillai Cast : Siva Karthikeyan Year : #2019
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2020™