Director - Naveen Raghavan
Starring - #Vimal, Lakshmi Menon
Producer - N. Subash Chandrabose, A. Sargunam, Nandha Kumar
Singer - #Hariharasudhan & Vandana Srinivasan
Music - N.R. Raghunanthan
Lyrics - #Yugabharathi
பாத்துப் பாத்து உன்னப் பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு
உன்னப் பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு?
ஆச கூடிப் போக
அணிலும் சிங்கம் ஆச்சு?
தாலி செய்யச் சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டிப் பேச்சு
கோழி ரெக்கை உன்னப் பார்த்து
வானவில்லா ஆனேன்
கொஞ்ச நேரம் உன்னப் பேசி
கண்ணதாசன் ஆனேன்
கூடப் பந்து நீயும் தீண்ட
பூமிப் பந்து ஆனேன்
கூரு கத்திக் கண்களால
ஊதுபத்தி ஆனேன்
நூலுக் கண்டு உன்னால், கோலிக் குண்டு ஆனேன்
பாத மண்ணு ஏனோ, பூசும் மஞ்சள் ஆனேன்
ஜோடியாக நீயும் சேர
பட்டுப் பூச்சிப் பட்டம் ஆனேன்
நேத்து உன்னப் பார்த்தப் பின்பு
தூங்கலாண்ணு போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க
தோத்துத்தானே போனேன்?
தோத்து நீயும் போயிடுரேண்ணு
கோபமாகி போனேன்
கொஞ்சிடாமப் போனியேண்ணு
சாப்பிடாமப் போனேன்
உன்ன எண்ணி நானே ஒல்லியாகி போனேன்
புள்ளி நீயும் வைக்க கோலமாகி போனேன்
கூடு விட்டு கூடு பாய
கோக்கு மாக்கு ஆகி போனேன்
மஞ்சப்பை (2014) படத்திலிருந்து N.R.ரகுநாதன் இசையில் யுகபாரதி வரிகளில் பாடியவர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் ஹரிஹரசுதன்