ஒரு கண் ஜாடை (Oru Kan Jaadai) Song Lyrics - Anjaan Movie Songs Lyrics | Suriya
Movie :
#Anjaan
Song : Oru Kan Jaadai
Casts :
#Suriya.Sivakumar,
#Samantha
Music : Yuvan Shankar Raja
Lyric :
#Viveka
Singers : Benny Dayal, Shweta Pandit
Year :
#2014
ஆண் : ஒரு கண் ஜாடை
செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத
அன்பாலே எனை வெண்மேகம்
செய்தாளே
ஆண் : தரையில் போகும்
மேகம் இவளா மயங்கி
பார்த்தேனே உயிரும்
கூச்சல் போடும் அவள்
செய்யும் மாயம் ஓயாதே
ஆண் : ஒரு கண் ஜாடை
செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத
அன்பாலே எனை வெண்மேகம்
செய்தாளே
ஆண் : வானம் என்றால்
தலைக்கு மேலே இருக்கும்
என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆண் : ஆசை எல்லாம்
பூட்டி வைத்தேனே சாவி
உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை
வந்தாலே அள்ளிக்கொள்வேன்
நிமிடத்திலே
ஆண் : எந்நாளும் வேண்டுமே
உன்னோடு கைகள் சேர்த்து
போகும் நெடும் பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
ஆண் : ஒரு கண் ஜாடை
செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத
அன்பாலே எனை வெண்மேகம்
செய்தாளே
ஆண் : தொடரும் போட்ட
கதையை போல எந்தன்
மாலை முடிகிறதே உந்தன்
கண்கள் பார்க்கத்தானே எனது
காலை விடிகிறதே
ஆண் : வாரம் ஏழு நாளும்
உன்னாலே வானவில்லாய்
தெரிகிறதே உன்னைக்காணா
நாட்கள் எல்லாமே கருப்பு
வெள்ளை ஆகிறதே
ஆண் : மின்சாரத் தோட்டமே
உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு
அதிர்ச்சியடி காதல் செய்யலாம்
முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி
ஆண் : கம் ஆன்
ஒரு கண் ஜாடை
செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத
அன்பாலே எனை வெண்மேகம்
செய்தாளே
ஆண் : தரையில் போகும்
மேகம் இவளா மயங்கி
பார்த்தேனே உயிரும்
கூச்சல் போடும் அவள்
செய்யும் மாயம் ஓயாதே
#2014-Tamil-Songs-Lyrics #ஒரு-கண்-ஜாடை #Yuvan.Shankar.Raja-Songs-Lyrics #Shweta.Pandit-Songs-Lyrics #Benny.Dayal-Songs-Lyrics #Anjaan-Movies-Songs-Lyrics