Vasantha Kaalangal from Rayil Payanangalil TR Hits |
#TamilLyricsவசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆ…ஆ…ஆ…
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
—
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா…
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா…
அம்மம்மா…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ…ஆ…ஆ…ஆ…
—
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
—
மாதுளை இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா…
மாதுளை இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா…
அம்மம்மா…
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையால் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கத்தை ஜாலம்
பாவை சூடும் ஆடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி… இதழ்…கள்…ஊறுமடி
—
4 காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள்
Movie: Rayil payanangalil
#TamilOldLyrics #TamilOldFilmLyrics #TamilOldCinemaLyrics #TamilOldMovieLyrics #TamilCinemaOldLyrics #TamilOldLyric #RayilPayanangalil #OldTamilLyrics #OldTamilFilmLyrics #OldTamilMovieLyrics #EvergreenTamilLyrics