தமிழ்

Paayum Oli Nee Enakku| பாயும் ஒளி நீ எனக்கு
MANAIVI EN KADHALI மனைவி என் காதலி | #Tamil-Lyricsபாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா......
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா


#பாயு-மொளி-நீ #பாயு-மொளி #பாயு #பா #ப #Tamil-Old-Songs-Lyric #Tamil-Old-Films-Lyric

Paayum Oli Nee Enakku Video Song
https://youtu.be/6wemtXDFX2s


Paayum Oli Nee Enakku=== பாயும் ஒளி நீ எனக்கு
MANAIVI EN KADHALI மனைவி என் காதலிhttps://youtu.be/6wemtXDFX2s

Comment :
Related Items

MalayalamLyrics

Vaanam Chaayum Lyrics - Anarkali [2015]) | വാനം ചായും (അനാര്‍ക്കലി [2015]) Vaanam Chaayum Song Details Movie : #Anarkali Cast : Prithviraj Sukumarn, Biju Menon Year : #2015 Musician : #
Like Reply Share

தமிழ்

Apna Time Aayega Lyrics - Gully Boy | #Bollywood-Songs-Lyrics Song: Apna Time Aayega Movie: Gully Boy Year : #2019 Singer: Ranveer Singh Lyrics: #DIVINE & Ankur Tewari Music Produced by: Dub
Like Reply Share

தமிழ்

Full Power Lyrics -Lil Golu | Ft.Raaj Jones Full Power Hai! -(2) Full Power Hai, Power Hai, Power Hai, Power Hai Full Power hai ye gaana {4} Yahan khoo gayi kala ki kalakaari Industr
Like Reply Share

தமிழ்

Pyaar Mangdi Lyrics - Jassie Gill ft. Yashika Talwar Song : Pyaar Mangdi Cast : Yashika Talwar Artist : Jassie Gill Lyrics by : Happy Raikoti Music by : Avvy Sra Music Label : Jassie Gill
Like Reply Share
¤ Privacy Contact US
© FunRocks.iN 2020™